வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

​வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Comments