திபெத்தில் சிக்கிய தமிழ் பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

திபெத்தில் சிக்கிய தமிழ் பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

திபெத் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாகத் அங்குச் சென்று சிக்கிக்கொண்ட முப்பத்தொன்பது தமிழர்கள் இந்திய அரசின் தீவிர முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் நேபாளம் மற்றும் டெல்லி வழியாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதவிர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள மற்ற தமிழர்களின் நிலவரத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

Comments